ரிதன்யா வழக்கு.. மாமியார் ஜாமின் மனு ஒத்திவைப்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா, கணவர் குடும்பத்தாரின் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைதான அப்பெண்ணின் மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு மீதான விசாரணையை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சித்ராதேவிக்கு ஜாமின் வழங்க கூடாது என ரிதன்யாவின் தந்தை சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரும் கைதாகியுள்ளனர்.
Tags :