மாநில அரசின் அனுமதியின்றி சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி.

by Editor / 22-02-2025 09:47:04am
மாநில அரசின் அனுமதியின்றி சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி.

மாநில அரசின் அனுமதியில்லாமலேயே சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதி அளித்துள்ளது.சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று தேவை என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில், மாநில அரசின் அனுமதி இல்லாமலே இனி சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தொடங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்க அனுமதி கோரி மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெறாமல் நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம்.

 

Tags : மாநில அரசின் அனுமதியின்றி சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி.

Share via