.உலகம்முழுதும் காதலர் தினம் ஒருவாரமாகக்கொண்டாடப்படுகிறது

by Admin / 08-02-2023 10:44:46am
.உலகம்முழுதும் காதலர் தினம் ஒருவாரமாகக்கொண்டாடப்படுகிறது

தமிழ் இலக்கியங்களில் வர்ணிக்கப்படும் காமன் பண்டிகையை அன்று இளம் வயதினர் எல்லோரும் கொண்டாடியதாகவும் காமனாகிய  மன்மதன் தம் கையிலுள்ள கரும்பு வில்லால் கட்டிளம் காளைகளை மலர் அம்பால் வீழ்த்துவான் என்று
இலக்கிய வழி நாம் அறிகிறோம் .புராணங்களில் இந்திரனை  மன்மத கடவுளாகவே  சித்தரிக்கின்றன  .சிலப்பதிகாரத்தில்
மாதவியும் கோவலனும்காமன் பண்டிகையின் பொழுதே பிரிந்தனர் என்கிற செய்தி தெரிகிறது. காதலைசொல்லாத தமிழ்
இலக்கியமே இல்லை..புறம் சார்ந்த இலக்கியத்தில் கூட அஙகங்கே  காதல் குறித்த செய்திகள்  உண்டு. அகம் சார்ந்த
இலக்கியம்  தமிழ்  இலக்கியத்தில் மட்டும் தான்   உள்ளது.  இறைவனைப்போற்றி பாராட்டும் பக்தி இலக்கியங்களும் காதல்
நயம்  சொட்ட..சொட்டவே பேசுகிறது. சிற்றிலக்கியங்களைச் சொல்லவே வேண்டாம்.அவை முழுக்க ..முழுக்க ..மங்கை ,மடந்தை ,அரிவை,தெரிவை,பேரிளம் என பெண்கள் உலாவரும்மன்னனின் அழகில் மயங்கிகாதல் வயப்படுவதை காமம் ரசம் வழிய பேசும்..கம்ப ராமாயணம்,திருக்குறல்,ஆண்டாள் பெருமாளை வர்ணிக்காசொற்கள் உண்டா.. ?காதல் இலக்கியத்தாலே இளமையோடு இருக்கும் மொழி தமிழ்.  அப்படிப்பட்ட காதல் ...இன்றுகாதலர் தினமாக இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது  ,உலகம் முழுதும்....உலகம் காதலினால் உயிர்ப்பிப்பதால் தான் பாரதி ஆதலினால்,காதல் செய்வீர்  என்று சொன்னான்...உலகம்முழுதும் காதலர் தினம் ஒருவாரமாகக் கொண்டாடப்படுகிறது.காதலர்வாரம் 2023
ரோஜா தினம்  (7 பிப்ரவரி 2023)
முன்மொழிய நாள் (08 பிப்ரவரி 2023)
சாக்லேட் தினம் (09 பிப்ரவரி 2023)
டெடி டே (10 பிப்ரவரி 2023)
வாக்குறுதி நாள் (11 பிப்ரவரி 2023)
கட்டிப்பிடி நாள் (12 பிப்ரவரி 2023)
முத்த தினம் (13 பிப்ரவரி 2023)
காதலர் தினம் (14 பிப்ரவரி 2023
 

 

Tags :

Share via