எதையும் நீங்கள் தான் உருவாக்க வேண்டும். .
எல்லோரும் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அந்த எண்ணத்தை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.. யாரும் இல்லை என்று நீங்கள் நினைத்து செயல்பட்டால் ,உங்களுடைய வெற்றி மிக எளிதாக கைகூடும்.. அவர் இருக்கிறார், இவர் இருக்கிறார், உதவி செய்வார் என்று நீங்கள் எண்ணத்தை வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் அது ஆபத்தில் தான் முடியும்.
. சுயநலம் நிரம்பிய உலகத்தில் இன்றைய பொழுதில், யாரும் யாருக்காகவும் துணை நிற்க தயாராக இல்லை. .வெறும் வார்த்தைகளில் வேண்டுமானால் நம்பிக்கை தரலாம் .ஆனால், தோளோடு தோள் நின்று உங்களுடைய சுமைகளை... என்னுடைய சுமை என்று தாங்கிக் கொள்வதற்கானகளும் வராது.. துன்பத்தில் கை தூக்கி விடுவதற்கும் ..கலங்கிய பொழுது, வடிகின்ற கண்ணீரை துடைப்பதற்கும் யாரும் வர மாட்டார்கள். உங்கள் கைகள் தான் உங்களுக்கு பலம்.. நீங்கள் மற்றவர்களை பலம் என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் பலவீனப்பட்டு போய் விடுவீர்கள்.
. உங்களை பலமானவன் என்று நீங்கள் நினைத்தால் ,பலவீனங்கள் எல்லாம் அடிபட்டு போய்விடும்.. காலங்கள் தான் நமக்கு சரியான பாடத்தை கற்றுத்தரும்.. ஒவ்வொரு மனிதர்களும்.. ஒவ்வொரு நேரத்தில்.. ஒவ்வொரு விதமான வேடத்தை அணிந்து கொண்டு.. வெளியே தெரியாத முகமூடி அணிந்த மனிதர்களாகவே நம்மோடு உலவி கொண்டிருக்கிறார்கள்.. நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
. உங்களிடம் பணம் இருந்தால் உங்கள் பசி ஆறும்.. யாரும் வந்து நீங்கள் பசித்திருக்கிறீர்களே என்று ஓடி வந்து உணவளித்து ....உபசரித்து செல்லக்கூடிய மனிதர்கள் எல்லாம் செத்துப் போய் காலங்கள் ஆகிவிட்டன ... இன்று பணம் மட்டும்தான் பிரதானம் என்று ,ஒவ்வொருவரும், அவருடைய நெஞ்சுக்குள்ளே வேதமாக வைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருப்பதால், நாமும் நம்மை சூழலுக்கு தக மாற்றிக் கொள்ள வேண்டும்.
. உங்களிடம் இருப்பவை எல்லாம் உங்களின் உழைப்பின் வழியாக வந்தவை ..அவை உங்களுக்கானவை .. கொடுத்தால் புகழ்வதும் ...கொடுக்காவிட்டால் இகழ்வதுமான உலகம் இது.. கொடுத்து அதைக் கேட்டு.. கெட்ட பெயர் வாங்குவதை விட., கொடுக்காமல் அதற்கான பெயரை வாங்கிவிட்டு போகலாம்.. எதையும் நீங்கள் தான் உருவாக்க வேண்டும். .நீங்கள் தான் அதை வெற்றிக்கு உரியதாக மாற்ற வேண்டும்..
யானையின் பலம் யானைக்கு தெரியாது என்பது போல் உங்களுக்குள் இருக்கும் ஆற்றல் வெளிப்பட வேண்டும் புறக்கணிப்புகளும் உதாசீனப்படுத்துதல்களும் அவமானங்களும் ஏற்படும்பொழுது தான் ,நீங்கள் புடம் போட்டு எடுக்கப்பட்ட தங்கமாக ஜொலிப்பீர்கள்.. நிகழக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் ,உங்களை தூண்டி விடக் கூடியதாக. உங்கள் ஆற்றலையை பெருக்கக் கூடியதாக நீங்கள் உணர்ந்தால்... அதற்காக உழைத்தால்.... ,உங்களை அழிக்க நினைத்தவர்கள், தூக்கி தூர வீசியவர்கள், அனைவரும் உங்கள் காலடியில் ஒரு காலகட்டத்தில்...
Tags :


















