இது சாதாரண தீ விபத்து அல்ல எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்-இபிஎஸ் எச்சரிக்கை.

by Staff / 13-07-2025 11:19:30am
இது சாதாரண தீ விபத்து அல்ல எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்-இபிஎஸ் எச்சரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம் வரதராஜன் நகர் பகுதியில் டேங்கர் ரயிலில் டீசல் டேங்க் வெடித்து, தீ பரவியதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்   பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உடனடியாக மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படைகளை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக, பாதுகாப்புடன் வெளியேற்ற வேண்டும். இது சாதாரண தீ விபத்து அல்ல; டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags : This is not an ordinary fire and should be handled with caution - EPS warning.

Share via