40,000 பெண்கள் மாயம்.. அதிர்ச்சி தகவல்

குஜராத் மாநிலத்தில் 2016 முதல் 2020 வரையிலான 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அதிச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2016-ம் ஆண்டில் 7,105 பேர், 2017-ம் ஆண்டில் 7,712 பேர், 2018-9,246, 2019-ம் ஆண்டில் 9,268 பேர், 2020-ம் ஆண்டில் 8,290 என மொத்தம் 41,621 பெண்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து பேசிய குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பிர் சுதிர் சின்ஹா, காணாமல் போன வழக்கில் பெண்கள் விபச்சாரத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்களா என விசாரித்து வருவதாகக் தெரிவித்துள்ளார்.
Tags :