கொடுரம் குழந்தை பிறந்த 3வது நாளில் தாய் கொரோனாவுக்கு பலி!

by Editor / 22-05-2021 08:13:03am
கொடுரம் குழந்தை பிறந்த 3வது நாளில் தாய் கொரோனாவுக்கு பலி!

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பெண் சித்த மருத்துவர் ஒருவர் குழந்தை பிறந்த 3 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலைபிரியா (27) என்ற பெண் அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் உதவி சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கர்ப்பிணியான இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி சிகிச்சைக்காக வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது . அதே நேரத்தில் குழந்தைக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதாலும் , குழந்தையின் எடையும் போதுமானதாக உள்ளதால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்து விடலாம் என்று மருத்துவர்கள் கூறியுனர் .

எனவே அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தனர் . அதன்பிறகு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் . அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் பாதிப்பு அதிகமானது . இதையடுத்து அவர் கடந்த 15 ம் தேதி எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது . ஆனால் தொற்று குறையாமல் அதிகமானதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . பின்னர் அவரது உடல் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு , அடக்கம் செய்யப்பட்டது . இச்சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

 

Tags :

Share via

More stories