குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டமும் நீர்வரத்தும் அதிகரிப்பு.

by Editor / 26-06-2022 08:24:38am
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டமும் நீர்வரத்தும்  அதிகரிப்பு.

தென்காசி மாவட்ட  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம் புலியருவி, சிற்றருவி, மெயின் அருவி, உள்ளிட்ட ஏராளமான அருவிகள் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு மாதம் தொடர்ந்து மழை பெய்யாததால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்தது.கடந்த சில தினங்கள் முன்பு வரை  குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவியும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் இல்லாத நிலை இருந்து வந்தது.

 இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ததால் இயற்கையான சூழல் நிலவி வருவதால்  விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளார்கள்.அதே சமயம் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால,ம் புலியருவி, சிற்றரு,வி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மெயின் அருவி பகுதியில் பெண்கள் பகுதியில் ஓரளவுக்கு தண்ணீர் வரத்து உள்ளது.ஐந்தருவியில் 5கிளைகளிலும் தண்ணீர் கொட்டுவதால் ஐற்றுலாபபயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது.குற்றாலம் மெயினருவியில் நீர்வரத்து குறைவாக இருந்தாலும் குளிக்க கூட்டம் அதிகளாவே உள்ளது.இங்குள்ள அருவிகளில் போதியளவு நீர்வரத்து இல்லாததால் சுற்றுலாப்பயணிகள் அண்டைமாநிலமான கேரளமாநிலம் ஆரியங்காவு பாலருவி நோக்கி படையெடுத்து சென்றவண்ணமுள்ளனர்.

 

Tags :

Share via