குழந்தை கையில் பட்டா கத்தியை கொடுத்து பிறந்தநாள் கேக் வெட்டிய- வீடியோ வைரல்

by Staff / 08-10-2022 03:50:40pm
 குழந்தை கையில்  பட்டா கத்தியை கொடுத்து பிறந்தநாள் கேக் வெட்டிய- வீடியோ வைரல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார் (26). இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பனை என பல்வேறு வழக்குகள் உள்ளது. தனது அண்ணன் மகன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் முன்பு பட்டாக்கத்தியுடன் அண்ணன் மகனை மடியில் வைத்துக் கொண்டு குழந்தை கையில் பட்டா கத்தியை கொடுத்து பிறந்தநாள் கேக் வெட்டியுள்ளார். இதை வீடியோ எடுத்தும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலானதை அறிந்த காரைக்குடி வடக்கு காவல்துறையினர் ரவுடி அஜித்குமார் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo