அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

by Staff / 08-10-2022 03:58:09pm
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி அரசின் நிதித்துறை சார்பு செயலர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுவை அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜூலை 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு மூலம், மாநிலத்தில் உள்ள 21 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைய உள்ளனர். இதனால் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.54 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via