விசைப்படகு தொழிலாளர்களின் பிரச்சினைக்கு  30 நாட்களில்  தீர்வு

by Editor / 11-02-2023 10:08:47pm
 விசைப்படகு தொழிலாளர்களின் பிரச்சினைக்கு  30 நாட்களில்  தீர்வு

விசைப்படகு உரிமையாளர்கள்-தொழிலாளர் இடையே நடைபெற்ற பிரச்சனைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து வரும் திங்கட்கிழமை முதல் விசைப்படகு தொழிலாளர்கள்-உரிமையாளர்கள் கடலுக்கு செல்ல  முடிவு செய்துள்ளனர்.மேலும் 
 விசைப்படகு தொழிலாளர்களின் பிரச்சினையை 30 நாட்களில்  தீர்க்க மீன் வளத்துறை இணை இயக்குனர் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் விசைப்படகு உரிமையாளர்கள் தொழிலாளர்கள் பங்கேற்கும் குழு அமைக்கப்பட்டு தீர்வு காணப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories