தாய்மார்கள் ஆரோக்கியமாக வாழஆலோசனைகள் !

by Writer / 25-07-2021 06:54:02pm
தாய்மார்கள் ஆரோக்கியமாக வாழஆலோசனைகள் !

 

இயற்கையாகவே பெண்கள் உடல்ரீதியில் பலகீனமாகும் காலங்கள் பருவமெய்தியதிலிருந்து தொடங்குகிறது. அதுவும் குறிப்பாகத் திருமணம் முடிந்து முப்பது வயதிற்குமேல் உடல்சோர்வுக்கு என்பது இயல்பானதாக அமைந்துவிடுகிறது. குழந்தைபேறு, வேலைஅதிகரிப்பு, உடல்எடைகூடுதல், அலைச்சல் என பலகாரணங்கள் அவர்கள் உடல்நிலையில் சோர்வு ஏற்படுவதற்குக் காரணமாகின்றன.

இதோடு மூட்டுவலி, முதுகுவலிவேறுசிரமப்படுத்தும்.மருந்து மாத்திரைகள் எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம். தினமும் கொஞ்சநேரம் யோகாசனங்கள் செய்தாலே போதும். நம் உடல்நிலையை நம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.


மூட்டுவலி
இரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்டு சிறுநீரக கழிவாக வெளியேற வேண்டிய ‘யூரிக்’ எனும் அமிலம் கணுக்கால் மூட்டுக்களில் சேரும்பொழுது அது வீக்கமாக வலியாக மாறும்……
இதற்கு நாம் செய்ய வேண்டியது சர்வாங்காசனம், திரிகோணாசனம், பரிவிர்ததிரிகோணாசனம், பார்கவகோணாசனம், வஜ்ராசனம், கோமுகாசனம், பஸ்சிமோத்தானாசனம், பாதாங்குஸ்தாசனம், கிரெலிஞ்சாசனம், மரிச்சாசனம்அர்த்தமச்சேந்திராசனம், அறுமானாசனம், சிரசாசனம்செய்தால்நம்கால்மூட்டுக்களில்உள்ளவீக்கம்குறையும்….வலிதானாகமறைந்துவிடும்.


முதுகுவலி முதுகெலும்பு வயது முதிர்வினாலும் சரியான ஊட்டச்சத்து இன்மையும் காரணமாகவும் தேயும்போது முதுகுவலி ஏற்படும். சிலர் முதுகை வளைந்தநிலையிலே உட்காருவதால் தண்டுவட எலும்புகள் தேய்ந் துநிமிரமுடியாதவாறுவலிஏற்படும்….இத்தகுவலிபிரச்சனைகளிலிருந்துவிடுபட..


சலாபாசனம், தனுராசனம், புஜங்காசனம், பூர்வதாசனம், மரீச்சாசனம், அர்த்தமச்சேந்திராசனம், சிரசாசனம், சர்வாங்காசனம், சக்ராசனம், பவணமுக்தாசனம்போன்றஆசனங்களைச் செய்து கொள்ளலாம்
 நின்றநிலை, உட்கார்ந்து செய்யும் யோகாசனங்கள் தவிர்க்கப்படவேண்டும்…
மேலே குறிப்பிட்ட ஆசனங்களை வழிமுறைப்படி  செய்தால் உடல் ஆரோக்கியமாகவும், புத்தெழுச்சியாகவும் இருக்கும்… இந்த யோகாசனங்களை யாரிடமாவது கற்றுக்கொள்ளலாம். இல்லையெனில் இணையதள வீடியோக்கள் பார்த்தும் செய்து பயன்பெறலாம். 


- யோகன் 

தாய்மார்கள் ஆரோக்கியமாக வாழஆலோசனைகள் !
 

Tags :

Share via