இலவச வேட்டி கொள்முதலில் மட்டும் ரூ.60 கோடி ஊழல் - அண்ணாமலை
இலவச வேட்டி கொள்முதலில் மட்டும் ரூ.60 கோடி ஊழல் நடந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய்குமாருக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில்,கைத்தறித்துறையில் நடந்துள்ள ஊழல் மற்றும் அமைச்சர் ஆர்.காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலவச வேட்டி கொள்முதலில் மட்டும் ரூ.60 கோடி ஊழல் நடந்துள்ளது. இலவச சேலை கொள்முதலில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஒரு கிலோ ரூ.320 வரை விற்கப்படும் பருத்தி நூலைப் பயன்படுத்தாமல், வேண்டுமென்றே, அதில் பாதி விலையான ரூ.160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வார்ப் பகுதியை நெய்திருக்கிறார்கள். ஒரு வேட்டியில், 78% பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.
Tags :