ஆந்திரத்தில் புதிதாக 1,546 பேருக்கு கரோனா தொற்று

by Admin / 03-08-2021 05:53:21pm
ஆந்திரத்தில் புதிதாக 1,546 பேருக்கு கரோனா தொற்று



ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,546 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆந்திரத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,546 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,71,554ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க | வூஹானில் மீண்டும் கரோனா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் சீனா

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,428ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,940 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 19,37,956ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | உயரும் தில்லி எம்எல்ஏக்களின் ஊதியம்: புதிய ஊதியம் எவ்வளவு?

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 20,170 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

Tags :

Share via

More stories