சென்னையில் ஐடி, அமலாக்கத்துறை சோதனை
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல் புரவைவாக்கம் கிளெமென்ஸ் சாலையில் உள்ள ஜெயின் வில்லா அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :