பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்

சென்னை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு சமைத்து, தேவைப்படும் மக்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் வழங்கி வருகின்றனர். தாம்பரம், இராதாகிருஷ்ணன் நகர், அன்னை சத்யா நகர், எழில் நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்த மக்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். அதே போல், வில்லிவாக்கம், செங்கல்பட்டு தொகுதி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களிலும் நாதகவினர் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
Tags :