தப்பி ஓடிய குற்றவாளி ஒரு மணி நேரத்தில் விரட்டி பிடித்த போலீஸ்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வெங்கடேஷ்.இவருடைய மோட்டார் சைக்கிளை திருடியது தொடர்பாக திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த நிஷார் அகமது என்பவரை தியாகதுருகம் போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து அவரை கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்றனர். அப்போது போலீசாரிடம் பாத்ரூம் சென்று வருவதாக கூறிவிட்டு கோர்ட்டு வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு நிஷார் அகமது சென்றார்.. இவர் சென்று நீண்டநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து கழிப்பறைக்கு சென்று போலீசார் பார்த்தபோது, அங்கு அவர் இல்லை. போலீசாரை ஏமாற்றிட்டு நிஷார் அகமது அங்கிருந்து தப்பிச்சென்றது தெரிந்தது.இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும் அந்தந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் இருந்து மற்றொரு பேருந்துக்கு ஏறி வெளியூர் தப்பிச்செல்ல முயன்ற நிஷார் அகமதுவை சங்கராபுரம் காவல்துறையினர் மடக்கி பிடித்து தியாகதுருகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர் மேலும் நீதிமன்றத்தில் இருந்து தப்பி சென்ற குற்றவாளியை சுமார் ஒரு மணி நேரத்தில் விரட்டிபிடித்த சங்கராபுரம் காவல் துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரும் பாராட்டி வருகின்றனர்.
Tags :