பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது.

by Staff / 22-09-2022 04:22:19pm
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது.

 சாலியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் அங்கன்வாடி புதிய கட்டிடத்தினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கெல்லாம் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருக்கிறதோ அங்கே மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்கப்படும் என கூறினார். மேலும் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியம் இல்லை என்றும், இனி சுகாதாரத்துறை என்ன கூறுகிறார்களோ அதை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

 

Tags :

Share via

More stories