கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம்
கேரளாவில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. நாடு தழுவிய சோதனைகள் மற்றும் அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநிலக் குழு இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
மாநில தலைவர்கள் என்ஐஏவால் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நியாயமற்றது என்றும் இது அரச பயங்கரவாதம் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் குற்றம் சாட்டுகிறது.நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் புதன்கிழமை நள்ளிரவு முதல் என்ஐஏ சோதனை நடத்தியது. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 70 மையங்களில் என்ஐஏ சோதனை செய்தது.
தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம், தேசிய செயலாளர் நஸ்ருதீன் எளமரம் உள்ளிட்ட 106 பேர் நாடு தழுவிய சோதனையில் கைது செய்யப்பட்டனர்.கேரளாவைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர் சி.பி. முஹம்மது பஷீர், தேசிய அவை உறுப்பினர் பேராசிரியர். பி. கோயா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags :