திமுக பிரமுகரின் மகன் படுகொலை

by Staff / 27-10-2023 11:49:22am
 திமுக பிரமுகரின் மகன் படுகொலை

சென்னை திருவொற்றியூரில் திமுக பிரமுகரின் மகனை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். திமுக வட்டப் பிரதிநிதி விவேகானந்தன் என்பவரின் மகன் காமராஜ் (35). நேற்று அலுவலகத்தில் காமராஜ் தனியாக இருந்தபோது இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 6 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via