உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி 132 நாள் நிறைவு

by Editor / 05-07-2022 01:43:41pm
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி 132 நாள் நிறைவு

உக்ரைனின் டான்பாஸ் மாகாணத்தில் தாக்குதலை தீவிரப்படுத்த படையினருக்கு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் போர் தொடங்கி 132 நாள் நிறைவடைந்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையே கடுமையான போர் நடந்து வரும் நிலையில், இந்த போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருவதால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.இதனிடையே லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசண்ஸ்க் நகரையும் ரஷியா கைப்பற்றியது. இந்நிலையில் டான்பாஸ் மாகாணம் மற்றும் டோனெட்ஸ்க் நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த படையினருக்கு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

Tags :

Share via

More stories