ஒலி மாசுபாட்டின் அளவு 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்

by Editor / 05-07-2022 01:37:13pm
 ஒலி மாசுபாட்டின் அளவு  30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்

சென்னையில் ஒலி மாசுபாட்டை குறைக்கும் நோக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி முதல் ஜூலௌ மூன்றாம் தேதி வரை சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் ஒலி மாசுபாடு எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஒலி மாசுபாடு தொடர்பாக 572 வழக்குகள் பதிவு செய்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 281 வழக்குகள் இருசக்கர வாகனத்தில் அதிக சத்தத்துடன் வைக்கப்பட்டிருந்த ஆரன்களை பறிமுதல் செய்ததற்காக என்பதையும் கூறியுள்ளனர். இதன் இடையே சென்னை மாநகர போலீசார் உதவியுடன் தனியார் தொண்டு நிறுவனம் சென்னை மாநகரில் பல்வேறு இடங்களை குறிவைத்து நடத்திய சோதனைகளில் ஒலி மாசுபாடு அளவு இயல்பை விட 30 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. பொதுவாக சுற்றுச்சூழல் துறையின் விதிப்படி நகரங்களில் இருக்கும் ஒலியின் அளவு, பகலில் 65 டெசிபலும், இரவு நேரத்தில் 50 டெசிபலும் இருக்க வேண்டும் என்பது தான். இருப்பினும் தற்போதைய கணக்கெடுப்பின்படி சென்னை மாநகரில் 85 டெசிபல் ஒலி மாசுபாடு பதிவாகியுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல்  ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

 

Tags :

Share via