மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் 10ம் தேதி வரை ரத்து

by Editor / 05-09-2022 11:28:12am
மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் 10ம் தேதி வரை ரத்து

மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ராஜபாளையம் - சங்கரன்கோவில் இடையே ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இன்று முதல் வருகிற 10ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

 

Tags :

Share via