யூடியூப் சேனல் மீது மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு
பிராங்க் வீடியோ எடுத்தல் என்ற பெயரில் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும், அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்துகொண்டால், அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சிறப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில், கோவை 360 டிகிரி என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் மேற்கண்ட Prank Videos என்ற பெயரில் பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், உடல் ரீதியாகவும், மனரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்துகொண்டு அதை வீடியோ எடுத்து, கோவை 360 டிகிரி என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டது தெரியவந்தது.அதன் பேரில், கோவை சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்.39/ 2022 U/s 354D IPC & 4 of TNPHW Act r/w66E IT Actன் படி கோவை 360 டிகிரி என்ற யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :