கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி, ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு கடந்த ஓராண்டாக விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து தீவிரவாத தடுப்புப் பிரிவு விசாரணை நடத்துகிறது. 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் அந்தப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Tags :