தனிப்படைகளை கலைக்க தமிழக டிஜிபி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் எஸ்பி, டிஎஸ்பி தலைமையில் இருக்கும் சிறப்பு தனிப்படை, அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்புவனம் சம்பவத்தில் தனிப்படை காவலர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததையடுத்து தனிப்படையை கலைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மண்டல ஐஜிக்கள் இந்த விவகாரத்தை கண்காணித்து தனிப்படை குறித்த அறிக்கை அளிக்கவும் டிஜிபி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.
Tags :