டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை  தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியில்....

by Admin / 26-12-2024 12:25:44am
டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை  தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியில்....

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து  தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார். இதன் மூலம் ஆட்டிப் பிரதேசத்திற்கான பாதுகாப்பு செலவினங்களை டென்மார்க் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய தேவைகள் நிறைவேற்ற வேண்டிய ஒரு நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அமெரிக்கா அதிபர் சமீப காலமாக கிரீன்லாந்து பற்றி பேசி வருவதின் காரணமாக, கிரீன்லாந்து அதிபர் நாங்கள் விற்பனைக்கு இல்லை என்கிற ஒரு வாசகத்தை தற்பொழுது ட்ரம்பிற்கு பதிலாக அளித்துள்ளனர். இது ஒரு தேசத்தின் விதியில் ஏற்பட்ட முரண்பாடு என்று பாதுகாப்பு அமைச்சர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் கிரீன்லாந்தில் பாதுகாப்பு குறித்த முதலீடு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .பாதுகாப்பிற்காக இரண்டு ஆய்வு கப்பல்கள், நீண்ட தூர பயணிக்கும் ட்ரோன்கள், இரண்டு கூடுதல் நாய் சவாரி அணிகளுக்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்டிக் பகுதிகளில் பணியாளர்களை மேம்படுத்துவதையும் தீவின் மூன்று சிவிலியன் விமான நிலையங்களில் ஒன்றை சூப்பர் சோனிக் போர் விமானங்களுக்கு இடம் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்படுவதாகவும் இது குறித்து முன்பு தாங்கள் அறியப்படவில்லை என்றும் தகவல் வெளியிட்டுள்ளார். .

கிரீன்லாந்தை டிரம்ப் வாங்குவதில் காட்டும் ஆர்வம் எங்கள் உரிமை, கட்டுப்பாடு ,உலகளாவிய பாதுகாப்பு, சுதந்திரம் இவற்றிற்கான ஒரு நிலைப்பாட்டை உருவாக்கி உள்ளதாகவும் பல்வேறு நிலைகளில் ஆரம்பத்தில் இருந்தே அவர்  கிரீன்லாந்தை வாங்குவது குறித்த கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் அதை கிரீன்லாந்தில் உள்ளவர்கள் நிராகரித்தார்கள் என்றும் அவர் கருத்தை வெளியிட்டுள்ளார்.. டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான  கிரீஸ் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டுள்ளது. இங்கு அமெரிக்காவினுடைய பெரிய விண்வெளி நிலையம் இருப்பது போல் அமெரிக்கா- ஐரோப்பிய இடையிலான ஒரு குறுகிய பாதை இருப்பதன் காரணமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .அத்துடன் இங்கு அதிக கனிம வளங்கள் நிறைந்து காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது..

 

டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை  தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியில்....
 

Tags :

Share via