தீபாவளிக்கு ஊருக்கு போக ரயில் டிக்கெட் புக்கிங் ஸ்டார்ட்

by Staff / 30-06-2024 03:06:09pm
தீபாவளிக்கு ஊருக்கு போக ரயில் டிக்கெட் புக்கிங் ஸ்டார்ட்

வரும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையடுத்து ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. அக்டோபர் 29 ஆம் தேதி பயணிக்க விரும்புபவர்கள் நாளை புக்கிங் செய்து கொள்ளலாம். 30 -ம் தேதி பயணம் செய்ய விரும்புவர்கள் நாளை மறுநாளும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். 80 சதவீத டிக்கெட்டுகள் இணயதளம் மூலமே புக்கிங்க் ஆகின்றன. இதனால், இணையதளத்தில் டெக்னிக்கல் கோளாறு ஏற்படாதவாறு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகளை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo