தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை

by Staff / 01-04-2024 02:47:53pm
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  ஆலோசனை

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாளை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். பறக்கும் படையால் இதுவரை ரூ.109 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடக்கவுள்ளது. 4ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
 

 

Tags :

Share via