12 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை

by Staff / 26-09-2022 11:11:23am
12 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை

டெல்லி அருகே உள்ள சீலம்பூர் பகுதியில் 12 வயது சிறுவனை 4 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் டெல்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் எனது மகனை செப்டம்பர் 18ம் தேதி நான்கு நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்தரங்கப் பகுதிகளில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காவல் துறையினர் விசாரணையில் அந்தச் சிறுவனின் நணபர்கள் 3 பேர் இந்தச் செயலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். அந்த 3 பேருக்கும் வயது 10 முதல் 12 தான் இருக்கும். இதுவரை 2 சிறுவர்களை கைது செய்துள்ளோம் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால் கூறுகையில், “இதுவொரு கொடூரமான சம்பவம். பாதிக்கப்பட்ட சிறுவன் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கிறோம். இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

 

Tags :

Share via

More stories