தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

by Editor / 26-09-2024 04:41:27pm
தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.


விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டை வருகிற அக்டோபர் 27ஆம் தேதி நடத்த விக்கிரவாண்டி காவல் துறை அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், மாநாடு தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. அதில், மாவட்ட பொறுப்பாளர்கள், அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டிற்காக குழு அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை பெற்றதாக  தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றார்கள். கூட்டத்தில் மாநாடு தொடர்பான முக்கிய கருத்துக்கள் குறித்து பேசப்பட்டன.

முதல் மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் எவ்வளவு பேரை அழைத்து வர வேண்டும் என்பது குறித்து முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மாநாட்டில், போலீசார் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி நடப்பது, ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டைகளை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பிற மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளதால் அவர்களை எந்த முறையில் வரவழைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 

Tags : தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

Share via