மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு
தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை செயலாளராக உள்ள சுப்ரியா சாஹூவுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக இருந்த வெங்கடாசலம் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் வந்ததை அடுத்து, அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.செப்டம்பர் மாதத்துடன் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், வெங்கடாசலம் ஊழல் புகாரில் சிக்கி, அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக இருந்து வரும் சுப்ரியா சாஹூவுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Tags :