புலி தாக்கி கல்லூரி மாணவி பரிதாப பலி-புலியை சுட்டுக் கொல்ல அரசு உத்தரவு

by Editor / 03-12-2022 08:36:04am
புலி தாக்கி கல்லூரி மாணவி பரிதாப பலி-புலியை சுட்டுக் கொல்ல அரசு உத்தரவு

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள டி நர்சிபூர் தாலுகாவில் உள்ள கபேஹுண்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 21 வயதுடைய கல்லூரி மாணவி மேக்னா உயிரிழந்துள்ளார். நேற்று மாலை ஏழு மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்து பண்ணைக்கு சென்று கொண்டிருந்த போது புலி தாக்கியது. மாணவியை புலி 200 மீட்டர் இழுத்துச் சென்றது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் ரத்த வெள்ளத்தில் மாணவி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பலத்த காயம் அடைந்த மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. மேக்னா நர்சிபூர் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு ரூ.7 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும் வீட்டில் உள்ள ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்துறையினர், ஆட்கொல்லிப் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புலியை சுட்டுக் கொல்ல கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கிராமத்தில் புலியால் மனிதர்கள் உயிரிழப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த அக்டோபரிலும் புலி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

 

Tags :

Share via

More stories