80வயது மூதாட்டி ஒருவருக்கு இந்திய ராணுவம் சார்பில் வீரத்தாய் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் சுப்புலட்சுமி தம்பதி இவர்களது மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் மற்ற இரண்டு மகன்களும் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனால் தனது மூன்று மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய சுப்புலக்ஷ்மி அம்மாளை பாராட்டி ராணுவம் சார்பில் அவருக்கு வீரத்தாய் விருதும் பதக்கமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை மாவட்ட படைவீரர்கள் நல அலுவலக உதவி இயக்குனர் சுப்புலக்ஷ்மி அம்மாளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

Tags :