கள்ளக்காதல்: தற்கொலை செய்துகொண்ட ஜோடி
திருச்சி முசிறி அடுத்துள்ள காட்டுப்புத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (29) ஐடிஐ படித்து விட்டு விவசாய வேலை செய்து வந்துள்ளார். திருமணம் ஆகாத இவருக்கும் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவரது மனைவி கீர்த்தனா (23) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரிந்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். உயிரிழந்த கீர்த்தனாவுக்கு 5 வயதில் மகள் இருக்கிறார்.
Tags :