கள்ளக்காதலால் மனைவிகள் மாறிய அவலம்
பீகார் மாநிலத்தின் ககாரியா மாவட்டத்தில் வசிக்கும் ரூபி தேவி என்ற பெண், நீரஜ் என்பவரை 2009-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், ரூபி தேவிக்கு முகேஷ் என்ற நபருடன் திருமணம் மீறிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. முகேஷுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். முகேஷும், ரூபி தேவியும் கடந்த ஆண்டு வீட்டைவிட்டு வெளியேறி, திருமணம் செய்துகொண்டனர்.
இதையறிந்த நீரஜ் காவல்துறையில் முகேஷ் மீது புகாரளித்தார். இதற்கிடையே இந்த விவகாரத்தைப் பேசி தீர்ப்பதற்காக கிராமப் பெரியோர்கள், இரு குடும்பத்தாரையும் அழைத்தனர். ஆனால், அதற்கு நீரஜ் ஒப்புக்கொள்ளாமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், முகேஷைப் பழிவாங்க நினைத்த நீரஜ், முகேஷின் மனைவியைத் திருமணம் செய்துகொண்டார். இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், முகேஷ் மனைவியின் பெயரும் ரூபி தேவிதான். முகேஷின் மனைவி ரூபி தேவியும், தன்னை ஏமாற்றிவிட்டுச் சென்ற தன்னுடைய கணவரைப் பழிவாங்கும் நோக்கில், நீரஜைத் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
Tags :