முன்னாள் அமைச்சரை வெளுத்து வாங்கிய ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு.
மாவட்டச் செயலாளராக நான் இருக்கும்போது பல கட்சிக்கு சென்று விட்டு வந்தவருக்கு (மா.பா. பாண்டியராஜன்) பொன்னாடை போர்த்தினால் நான் எப்படி சும்மா விடுவேன். கட்சியை காட்டிக்கொடுத்தவர் மா.பா. பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கு? நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க. நான் ஒன்னும் பைத்தியக்காரன் அல்ல, தொலைத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்து பேச்சு. நான் அதிமுகவில் குறுநில மன்னர்தான், எனக்கு பின்னால் உள்ள அதிமுக தொண்டர்கள் அனைவரும் வாள் ஏந்திய படை வீரர்கள். என்னைப் பற்றி பேச வேண்டுமானால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறீர்கள் என மா.பா. பாண்டியராஜனுக்கு சவால்.
விருதுநகரில் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது என சவால். எடப்பாடி பழனிச்சாமிக்கு அரிவாள், துப்பாக்கி வந்தாலும் எதிர்த்து நின்று தாங்கி நிற்பேன். உன்னால் முடியுமா என கேள்வி? எம்ஜிஆரின் கையைப் பிடித்து ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் கட்டுப்படுவேன் என்றும், நான் சிபிஐக்கே பயந்தவன் அல்ல என்றார்.
Tags :