சிஐஎஸ்எப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம்-சேரன் வாழ்த்து.

by Editor / 07-06-2024 09:40:41am
சிஐஎஸ்எப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம்-சேரன் வாழ்த்து.

நடிகையும், பாஜக எம்.பி.,யுமான கங்கனா ரணாவத்தை, சிஐஎஸ்எப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திரைப்பட இயக்குநர் சேரன் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன். அந்த அடி நடிகைக்கானதல்ல. வாக்களித்த மக்களுக்கானது. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால் மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார். வாழ்த்துகள்' என கூறியுள்ளார்.

 

Tags : சிஐஎஸ்எப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம்-சேரன் வாழ்த்து

Share via