ஹரியானா தேர்தலுக்கு பிந்திய கணிப்பு முடிவுகள்
ஹரியானா தேர்தலுக்கு பிந்திய கணிப்பு முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது. 90 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி 44 இருந்து 54 இடங்களை கைப்பற்றும் என்றும் பாஜக 19 லிருந்து 29 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.. அரியானாவில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர்- 1 ஆகிய மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகளும் அக்டோபர் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது .பாஜக 20 இல் இருந்து 25 இடங்களையும் தேசிய மாநாடு காங்கிரஸ் கூட்டணி 35 இலிருந்து 40 இடங்களையும் கைப்பற்றும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.
Tags :