பார்வையற்ற மகளிர்களுக்கு முதல் முறையாக நடத்தப்பட்ட டி20 உலக கோப்பை போட்டி

by Admin / 28-11-2025 12:50:44am
பார்வையற்ற மகளிர்களுக்கு முதல் முறையாக நடத்தப்பட்ட டி20 உலக கோப்பை போட்டி

இந்திய பார்வையற்ற மகளிர் கிரிக்கெட் அணியினர் டி20உலகக் கோப்பையை வென்ற கையோடு பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றனர். பிரதமர் தம் இல்லத்தில் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்று ஒவ்வொருவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

பார்வையற்ற மகளிர்களுக்கு முதல் முறையாக நடத்தப்பட்ட டி20 உலக கோப்பை போட்டி இலங்கையின் கொழும்பில் இறுதிப்போட்டி நடந்தது இப்போட்டியில் நேபாள அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி இத்தொடர் முழுவதும் தோல்வியடையாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற நேபாளம் இலங்கை ஆஸ்திரேலியா பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க நாட்டு வீரர்களை களம் கண்டு கோப்பையை முதல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. நீ போட்டிகள் முறையே டெல்லி பெங்களூர் கொழும்பு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. இந்த சிறப்புமிக்க வரலாற்று சாதனைக்காக பிரதமர் நரேந்திர மோடி வெற்றி அடைந்த இந்திய அணியினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த உலகக் கோப்பை வெற்றியானது மாற்றுத் திறனாளிகள் விளையாட்டில் பாலின சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை நோக்கிய ஒரு முன்னோக்கிய நகர்வாகும்

பார்வையற்ற மகளிர்களுக்கு முதல் முறையாக நடத்தப்பட்ட டி20 உலக கோப்பை போட்டி
 

Tags :

Share via