புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

by Staff / 14-10-2024 05:16:42pm
புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (அக்.15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo