மெதுவாக நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி

by Staff / 14-10-2024 05:10:17pm
மெதுவாக நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 16-ம் தேதி வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via