வளசரவாக்கத்தில் திடீரென பற்றி எரிந்த கார்கள்

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் பொறியாளர் ஸ்ரீகாந்த். இவரது வீட்டருகே தமிழ்நாடு அரசின் ஏபிஆர்ஓ கோகுல் என்பவரும் வசிக்கிறார். இருவரும் தங்களது கார்களை வீட்டருகே நிறுத்தியிருந்தனர். இந்நிலையில், அந்த கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து காவலர்கள் விசாரிக்கின்றனர்.
Tags :