செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியைத்தொடங்கி வைத்தார் பிரதமர்

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வந்தார் .வழி நெடுக பொதுமக்களும் பா.ஜ.க வினரும் திரண்டிருந்து பிரதமர் வருகையை கரவொலி எழப்பியும் கொடி அசைத்தும் பிரதமரை வரவேற்றனர் .பிரதமரும் வழி நெடுக திரண்டிருந்தவர்களை
கையசைத்தும் இரு கைகூப்பி வணக்க ம் தெரிவித்த வண்ணம் நேரு விளையாட்டரங்கின் நிகழ்ச்சி நடக்கும் மேடைக்கு வந்தாா். அவரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்று மேடையில் அமர வைத்தார் .விழா மேடையில், தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி .,மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் ,மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் .,செஸ் ஒலிம்பியாட் கூட்டமைப்பின் தலைவர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் அமர்ந்திருந்தனர் .நிகழ்வின் தொடக்கமாக தேசீயகீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.பின்னர், நடிகர் கமல்ஹாசனின் ஆங்கில விளக்கத்தில் தமிழர்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் நாட்டியம் மல்யுத்தம்,சேர,சோழ,பாண்டியர் ஆட்சிச்சிறப்பு தமிழர்களின் கட்டிடக்கலையின் சிறப்பு, நீரைத்தேக்கிவைத்து விவசாயம் செய்ய தமிழரின் கல்லணையின் சிறப்பு என மேடையில் வித்தியாசமான ஒளிகாட்சிகளாக அற்புதமாக வடிவமைப்பு, எம்ஜாய்.என்சாமி பாடலை மேடையில் பாடிய தீ, மாரியம்மாள்,சிலப்பதிகாரத்தின் நீதி கேட்டு போராடியகண்ணகி காட்சி நாடகம் என பல நிகழ்வுக்குப்பின்னர் 75 நகரங்களை கடந்து சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் மேடைக்கு கொண்டு வந்து முதல்வரிடம் தர..அதை பிரதமருடன் இணைந்து பெற்றுக்கொண்டு இளம் வீரர் பிரக்ஞானந்தாவிடம் முதலமைச்சர் வழங்க...அவர் ஜோதியை பெற்றுக்கொண்டு..விழா மேடைக்கு கிழிலிருந்த இடத்தில் ஜோதியை ஏற்றினார்.
.மத்திய அமைச்சர்கள் உரை.அததை் தொடர்ந்து கூட்டமைப்பின் தலைவர் உரை.தமிழ க முதலமைச்சரின் சிறப்பான உரையை அடுத்துப்பிரதமர் தமிழில் வணக்கம் சொல்லி,திருக்குறலைஉதாரணம் காட்டி செஸ் தமிழகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருக்கிறது என்பதைச்சொல்லி உரையை நிறைவு செய்த பின்பு கருப்பு ,வெள்ளை காய்களின் திரையை அகற்றித் தொடங்கி வைத்து கவர்னர் மாளிகைக்குச் சென்றார் .நாளை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

Tags :