கருவாடு பவுடர் கம்பெனி உரிமையாளர் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களாத் தெருவை சேர்ந்தவர் அந்தோணி அரசாங்க மணி என்பவர் சிவந்திபட்டியில் அந்தோணி டிரேடர்ஸ் என்ற பெயரில் கருவாட்டினை பவுடராக மாற்றி தீவனமாக மாற்றும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது நிறுவன அலுவலகம் கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மதியம் திடீரென 4 வாகனங்களில் வந்த வருமானவரித்துறையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள்அந்தோணி அரசாங்க மணி வீடு, சிவந்திபட்டியில் உள்ள கம்பெனி, கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவில் அலுவலகம் என பிரித்து ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை 12மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. நிறுவனத்தின் கணக்குகள், பண பரிமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
Tags : கருவாடு பவுடர் கம்பெனி உரிமையாளர் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.