திருச்செந்தூர் கடற்கரையில் இன்று சூரசம்ஹாரம்.

by Editor / 07-11-2024 09:51:35am
திருச்செந்தூர் கடற்கரையில் இன்று சூரசம்ஹாரம்.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் உள்ளிட்ட அறுபடை வீடுகளிலும் நடக்கிறது. இதில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்செந்தூர். ஆகும். திருச்செந்தூர் கடற்கரையில் மாலை 4.30 மணியளவில் நடைபெறும் சூரசம்ஹார வைபவத்தை காண இப்போதிருந்தே  பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.லட்சக்கணக்கான பக்தர்கள் இதைக் காண வருவார்கள் என்பதால்  4500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிய நகரங்களில் இருந்து இன்று திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளும் நெல்லையிலிருந்து சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.

கந்த சஷ்டி விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று திருச்செந்தூர் வருகிறார். 
  சூரசம்கார வைபவம் நடக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்

 

Tags : திருச்செந்தூர் கடற்கரையில் இன்று சூரசம்ஹாரம்.

Share via