ஓணம் பண்டிகையையொட்டி தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனை தீவிரம்
கேரளாவில் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை வருகிற 21-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதால் ஏராளமானோர் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பயணிப்பார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் 2-வது அலை இன்னும் ஓயாததால் அங்கிருந்து தமிழகம் வருபவர்களுக்கு மாநில எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப் பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் அதற்கான சான்றிதழ்களை சரிபார்த்து அதன் பின்னரே தமிழகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை வருகிற 21-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதால் ஏராளமானோர் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பயணிப்பார்கள்.
பண்டிகையையொட்டி சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தப்படலாம் என்பதால் மது விலக்கு போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை ஆரியங்காவு மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.
கார் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள் உடமைகளை முழுமையாக சோதனை செய்த பின்னரே மேற்கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மோப்ப நாய் மூலமும் போலீசார் சோதனை நடத்துகின்றனர்.
Tags :