சிங்கப்பூரிலிருந்து ராணுவ விமானங்களில்  வந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் 

by Editor / 24-04-2021 07:05:35pm
சிங்கப்பூரிலிருந்து ராணுவ விமானங்களில்  வந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் 

 

இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்திய விமானப்படை சிங்கப்பூரில் இருந்து 4 கண்டெய்னர்களில் நேற்று  காலை 2 மணி அளவில் சி -17 விமானம் மூலம் ஹிந்தன் விமானதளத்தில் இருந்து புறப்பட்ட ராணுவ வீரர்கள் சரியாக காலை 7.45 மணிக்கு, சிங்கப்பூர் சாங்கியில் உள்ள விமான நிலையத்திற்கு சென்றனர். அங்கிருந்து 4 கண்டெய்னர்கள் நிரம்ப கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கலன்களை எடுத்துக்கொண்ட வீரர்கள்  இந்தியாவின் பனகர் விமானத்தளத்தை அடைந்தனர்.
இது குறித்து உள்துறை அமைச்சர் கூறும் போது, “ மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கலன்களை எடுத்து வர வெளிநாடுகளில் ராட்சத அளவிலான டேங்கர்கள் கொண்டுவரப்படும்” என்றார்.இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் பற்றாகுறை நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லி நிலைமை படு மோசாமாக மாறியிருக்கிறது. இன்று காலை இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது டெல்லி அரசு இப்படியே போனால் நிலைமை சீரழிந்துவிடும் என்றும் மாநிலத்திற்கு நாள் ஒன்றுக்கு 480 மெட்ரி க் டன் தேவைப்படுவதாக கூறியுள்ளது.

 

Tags :

Share via