1200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமை பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் திருப்பரங்குன்றம் திருமலையூர் சாலை அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் 50 கிலோ எடை கொண்ட 24 மூடைகளில் 1200 கிலோ ஒரு ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.தொடர்ந்த அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட குடிமை பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு போலீசார் மதுரையைச் சேர்ந்த சாதிக், ஆறுமுகம், பாண்டி, கார்த்திகேயன், ஆகிய நான்கு பேரையும் கைது செய்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருப்பரங்குன்றம் ரேஷன் கடை விற்பனையாளர் விநாயகம் மற்றும் செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :



















