மேல்  வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இடி மின்னலும் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

by Admin / 06-04-2025 11:56:58pm
மேல்  வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இடி மின்னலும் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தென்கிழக்குவங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்  வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது .இதன் காரணமாக அடுத்த 48 மாநிலத்தில் தென் வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது .இதனால்  தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலும் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர பகுதிகளில் அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 48 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தெற்குவ ங்க கடல் மற்றும் அதன் ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடைவீசக்கூடும்..

 

Tags :

Share via